2025 மே 19, திங்கட்கிழமை

குறுங்கால ஊடகப் பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

ஊடகவியலாளர்களுக்கு புலனாய்வு மற்றும் அரசியல் இதழியல் சார்ந்த குறுங்காலப் பயிற்சிநெறி யாழ். பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தினால் நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்பயிற்சிநெறியில் ஊடகவியலாளர்கள், பிரதேச செய்தியாளர்கள், சிறுசஞ்சிகைச் செய்தியாளர்கள், பருவகால செய்தியாளர்கள்,  பத்தி எழுத்தாளர்கள், ஊடகவியல் மாணவர்கள், பாடசாலைகளில் ஊடகம் சார்ந்து கற்பிற்கும் ஆசிரியர்கள் ஆகியோர் பங்குபற்றமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கற்கைநெறிக்கு கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாதென்பதுடன் பயிற்சிநெறி முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. முப்பது மணித்தியால கற்கைநெறி 10 நாட்களுக்கு மாலை 3 மணிமுதல் 6 மணிவரை நடைபெறவுள்ளதாகவும் வெளிநாட்டிலிருந்து வளவாளர்கள் அழைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X