Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நகர் கொட்டடி கோணாந்தோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றின் குளியல் அறைப்பக்கமாக மறைந்திருந்த இனந்தெரியாத நபரொருவரை அயலவர்களின் உதவியுடன் வீட்டின் உரிமையாளர் பிடித்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இனந்தெரியாத நபர் நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் கொட்டடி கோணாந்தோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றின் குளியல் அறைப்பக்கமாக மறைந்திருந்து அந்த வீட்டில் நடப்பவைகளை அவதானித்துக் கொண்டிருந்தார்
இதை அறிந்த வீட்டின் உரிமையாளர் சத்தம் போடாமல் அயலவர்களை உதவிக்கு வரவழைத்து குறித்த நபரைப் பிடித்துள்ளார். இந்த நபர் எதுவும் பேசாத நிலையில் இது குறித்து யாழ். பொலிஸாருக்கு உடனடியாக தொலைபேசியில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த யாழ். பொலிஸார் குறித்த நபரை விசாணைக்காக அழைத்துச் சென்றனர். குறித்த நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
38 minute ago
53 minute ago