Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 15 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
பாடசாலையில் தரும் வீட்டு வேலைகளை ஓழுங்காகச் செய்து முடித்ததனால் தான் நான் யாழ் முதலிடத்தைப் பெறமுடிந்தது என இந்த வருடம் 2011 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற ரமேஸ் நிதுர்ஷிகா கூறியுள்ளர்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
நான் கல்வியை ஆர்வமாக கற்பதற்கு யாழ் புனித ஜோன் பெஸ்கோ பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் அயராத உழைப்பு உழைத்துள்ளன.ர் இதற்கு நான் நன்றியைத தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மேலும் நான் பாடசாலையில் தரும் வீட்டு வேலைகளை ஓழுங்காகச் செய்து முடித்ததனால் தான் நான் யாழ் முதலிடத்தைப் பெறமுடிந்தது .
என்னைப் போல் பலமாணவர்கள் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான வழிகாட்டல்கள் கிடைக்க வேண்டும் அப்போது திறமையானவர்கள் உருவாகுவார்கள் .
வைத்தியராக வருவதே தனது இலட்சியம் எனவும் எதிர்காலத்தல் புலமை பரிசில் எழுதவுள்ள மாணவர்கள் தன்னிலும் பார்க்க அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்கவேண்டும்' என்றார்.
குறித்த மாணவியின் தந்தை எமக்கு கருத்துத் தெரிவிக்கும்போது,
"யாழ் புனித ஜோன் பெஸ்கோ பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் உழைப்பு எனது மகளின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. மாணவர்களுக்கிடையிலான போட்டிகளும் இருக்கவேண்டும் அவ் போட்டியின் காரணமாகவும் அவர் வெற்றி பெற்றுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். எனது மகள் அதிக புள்ளிகளைப் பெறுவாள் என்பது தெரியும் ஆனால் யாழ் மாவட்டத்தில் முன்னணி பெறுவாள் என எதிபார்க்கவில்லை" என்றார்
நிதுஷிகா தந்தை ரமேஸ் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பிரதி அதிபராகக் கடமை ஆற்றுகின்றார். நிதுஷிகா தாயார் அருபா வேம்படி உயர்தரபாடசாலை ஆசிரியராகக் கடமை ஆற்றுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
38 minute ago
53 minute ago