Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
இன்றைய இளைய சமுதாயம் தேவையற்ற செயல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கின்றதே தவிர, தம்மை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பதில்லையென வடபிராந்திய மனிதவள அபிவிருத்தி முகாமையாளரும் யூனியன் அசூரன்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளருமான மரியநாயகம் விஜேந்தன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் இயங்கி வரும் விழுதுகள் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில் 'வேலையில்லாப் பிரச்சினையும் அதிகரித்து வரும் மன உளைச்சலும்' என்ற தலைப்பின் கீழ் ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு நிலையத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இளைஞர், யுவதிகளின் திறமைகள் பேப்பரில் காணப்படுகிறதே தவிர செயற்பாட்டில் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு நிறுவனமும் தகைமையுள்ள ஒருவருக்கு வேலை இல்லையெனக் கூறுவதில்லை. இளம் சமுகத்தினர் பல்லாற்றல் தன்மையை தம்மிடம் வளர்த்துக்கொள்ள வேண்டும். தகுதிக்கு மீறிய ஆசை இருக்கக்கூடாதெனவும் மரியநாயகம் விஜேந்தன் குறிப்பிட்டார்.
இதனாலேயே வேலையின்மையும் தேவையற்ற மன உழைச்சலும் ஏற்படுகின்றதெனக் கூறிய அவர், ஒரு விடயம் சரியானதோ அல்லது பிழையானதோவென அதை ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
சமூகத்தில் வேலையில்லையென்ற பிழையான தகவல்களை மக்களுக்கு வழங்கக் கூடாதெனவும் மரியநாயகம் விஜேந்தன் குறிப்பிட்டார்.
இந்நிகழ்விற்கு யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
32 minute ago
41 minute ago
2 hours ago
rajaram Thursday, 08 August 2013 11:22 AM
ஹை ராம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
41 minute ago
2 hours ago