2025 மே 19, திங்கட்கிழமை

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர் யாழ். மேல் நீதிமன்றால் விடுதலை

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

கண்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதனால் அதனை ஒரு சான்றாக ஏற்கப்படமாட்டாது என மன்று குறிப்பிட்டது. அதனைத் தொடர்ந்து, அரச சட்டத்தரணி வேறு சான்று இல்லை எனத் தெரிவித்ததையடுத்து குறித்த இளைஞரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் பணித்தது. குறித்த இளைஞர் சார்பில் வழக்குரைஞர் மு.றெமீடியஸ் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X