Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் தவறுகின்றனர் என யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் கட்டளைத்தளபதிக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்...
யாழ்ப்பாணத்தில் 'கிறிஸ் பூதம்' என்ற போர்வையில் பெண்கள் மீதான சேட்டைகளும் திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இது தொடர்பில் பொதுமக்களால் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதில்லையென தெரியவந்துள்ளது. இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்குமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும் நான் தெரிவித்துள்ளேன் என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
40 minute ago