2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். வேலணையில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். வேலணைப் பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவமானது நேற்று புதன்கிழமை இரவு 11 மணியளவில் 2ஆம் வட்டாரம் வேலணை கிழக்கு வேலணையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த செவ்வநாயகம் சரிவிமுத்து யேசுதாசன் (வயது 59) என்பவரே படுகொலை செய்யப்பட்டவராவார். அவரது மனைவி மற்றும் மகனும் இந்த இனம் தெரியாத நபர்களின் வெட்டுக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X