2025 மே 19, திங்கட்கிழமை

'மனித உரிமைக் கோட்பாடுகளும் அதன் அறிமுகமும் வளர்ச்சியும்' பயிற்சிப் பட்டறை

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 23 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'மனித உரிமைக் கோட்பாடுகளும் அதன் அறிமுகமும் வளர்ச்சியும்' என்ற கருப்பொருளில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு பயிற்சிப் பட்டறையொன்று நடத்தப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை யாழ்.கிறீன் உல்லாச விடுதியில் இந்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடாதிபதி நா.செல்வக்குமாரன் வளவாளராக கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார்.

யாழில் மனித உரிமைச் செயற்பாடுகள் அவற்றை சிவில் சமூகம் அறிந்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தப் பயிற்சிப்பட்டறையில் விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X