Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். வேலணை கிழக்குப் பகுதியில் - இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரேத போதைப் பொருள் கலந்த புகையிலைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
ஊர்காவற்றுறை மதுவரித் திணைக்களத்தின் பரிசோதனையாளர் என்.கிருபாகரன் குறித்த நபரின் வீட்டில் சோதணையிடும் போது 288 கிலோக்கிராம் கொண்ட போதைப் பொருள் கலந்த புகையிலைகளை வீட்டில் பதுக்கி வைத்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
என்.கிருபாகரனின் தகவலை அடுத்து வீட்டில் புகையிலைகளை பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை ஆஜர் படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த ஊர்காவற்றுறை நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவன், சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பிரகாரம் 5 லட்சம் ரூபா காசுப் பிணையும் அந்த பணத்தை கட்டத் தவறின் 2வருட சிறைத்தண்டனை எனவும் தீர்ப்பு வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 May 2025
18 May 2025