Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இலங்கையில் எந்தவொரு மாவட்டத்திலும் இல்லாத அபிவிருத்தித் திட்டங்கள் யாழ்ப்பாணத்தில் துரிதகதியில் நடைபெறுகிறதென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் புலி உறுப்பினர்களுக்கு முன்பள்ளி பயிற்சியளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கும் மேலும் உரையாற்றுகையில்,
'அபிவிருத்திக்காக எமது மாவட்டத்திற்கு கிடைக்கப் பெற்ற நிதியானது 41 ஆயிரம் மில்லியன் ரூபாவாகும். இந்த நிதியைப் பயன்படுத்தி பாரிய வேலைத்திட்டங்களை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்து வருகின்றோம்.
பாரிய அபிவித்தித்திட்டங்களான மீள்குடியேற்றம், வீதி அபிவிருத்தி, குடிநீர்திட்டங்கள், சுகாதார வசதிகள், மின்சாரம், கல்வி வசதிகள் போன்றவை முக்கிய அபிவிருத்தித் திட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்குரிய அபிவிருத்தித் திட்டத்திற்காக அரசசார்பற்ற நிறுவனங்களினால் 4 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்குரிய அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மிகவும் சரியான முறையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாண மக்களின் வாழ்வாதாரத்திற்காக பல வேலைத்திட்டங்கள் யாழ். செயலகத்தினாலும் முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
neethan Saturday, 08 October 2011 01:08 AM
41 ஆயிரம் மில்லியன் ரூபா அபிவிருத்திக்கா? நம்ப முடியவில்லையே? யாழ் மாவட்டம், நாட்டின் முன்மாதிரி மாவட்டம் யாழ் என்று சொல்லுங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
7 hours ago
7 hours ago
18 May 2025