2025 மே 19, திங்கட்கிழமை

தாய்வான் நாட்டிலிருந்து வருகை தந்துள்ள மருத்துவ குழுவினரின் நடமாடும் மருத்துவ சிகிச்சை

Kogilavani   / 2011 ஒக்டோபர் 10 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்)  
தாய்வான் நாட்டிலிருந்து வருகை தந்துள்ள  'றம் மௌண்டன் தொண்டர் அமைப்பு' என்ற மருத்துவக் குழுவினர்  மூதூர் பிரதேசம், பாட்டாளிபுரம் கிராமத்தில் மீளக்குடியேறியுள்ள பொதுமக்களின் சுகாதார வைத்திய தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக நேற்று  ஞாயிற்றுக்கிழமை முதல் நடமாடும் மருத்துவ சிகிச்சை மற்றும் உளவளத்துணை பயிற்சிகள் என்பவற்றை வழங்கி வருகின்றனர்.  

இத்தொண்டர் குழுவில் 46 மருத்துவர்கள், தாதியர்கள், பல்மருத்துவர், மருந்தாளர்கள் மற்றும் குழந்தை மனநல மருத்துவர், விளையாட்டு முறையிலான மனநல ஆலோசகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாட்டாளிபுர பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை வரை மருத்துவ முகாமை நடாத்தும் தாய்வான் குழுவினர் புதன்,வியாழக்கிழமை கோமரங்கடவெல பிரதேசத்தில் தமது மருத்துவ முகாமை நடாத்தவுள்ளனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X