Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 11 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
மாவட்டத்திற்குள் எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது அதில் சம்பந்தப்பட்ட மக்களின் நலன்களை கருத்தில் எடுத்தும் அவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டும் மேற்கொள்ளப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதிதலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி அரச செயலகத்தில் இன்று இடம்பெற்ற எல்லை மறு சீரமைப்பு சம்மந்தமான கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
"கிளிநொச்சியில் கரைச்சிபிரதேச செயலக பிரிவை இரண்டாக பிரிப்பது தொடர்பாகவும் புதிதாக கிரா அலுவலர் பிரிவுகளை உருவாக்குவது தொடர்பாகவும் மக்கள் பிரதிநிதிகள் மக்கள் அமைப்புகளின் கருத்துக்கள் மிக மிக அவசியமானது எனவே இது சம்மந்;தமான இறுதி தீர்மானம் எடுப்பதற்கு குறுகிய கால அவகாசம் அவசியம் அந்த கால அவகாசத்திற்குள் அனைவருடனும் கலந்தாலோசித்து தீர்மானம் மேற்கொள்ளப்படவேண்டும்" எனத்தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த கரைச்சி பிரதேச சபையின் தலைவர் திரு.நா.வை.குகராசா, நாடளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சந்திரகுமாரின் கருத்தை ஏற்றுக்கொள்வதாகவும் எல்லை மறுசீரமைப்பு சம்மந்தமாக தீர்மானம் மேற்கொள்வதற்கு கால அவகாசம் அவசியம் எனவும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் இலங்கை எல்லை நிர்ணய சபையின் தலைவி ஜே.சி.புலுமுலா மற்றும் சபையின் உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம அலுவலர்கள் மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
7 hours ago
7 hours ago
18 May 2025