Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களை முறையிடும் வகையில் யாழ். மாவட்ட செயலகத்தில் தனியான பிரிவொன்று இருவாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். குடாநாட்டில் இந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இற்றைவரை சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களாக 114 முறைப்பாடுகளும் வளர்ந்த பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களாக 175 முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் ஏதும் இடம்பெறின் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகத் தண்டித்தனர். இதனால் முன்னர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. எவராவது பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களில் ஈடுபடின் அது குறித்து வெளிக்கொண்டு வரப்படும். இதற்குரிய சட்ட நடவடிக்கைகள் உரிய முறையில் எடுக்கப்படும்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து முறைப்பாடுகள் எனக்கு கடிதங்களாகவும் இறுவட்டுக்களாகவும் மற்றும் ஆவணங்களாகவும் கிடைக்கப்பெற்றன. எனவே தயவு செய்து பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களை இனியாவது நிறுத்துங்கள். இவ்வாறு பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறுமானால் பெண்கள் அமைப்புக்களை அணிதிரட்டி பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடத் தயாராகவுள்ளோம்.
பெண்கள் மீது கட்டவீழ்த்து விடப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக பாதிக்கப்படும் பெண்கள் நேரில் வந்து எம்மிடம் முறையிடலாம் என்றார்.
peacefulguy Sunday, 16 October 2011 06:45 PM
நல்ல முயற்சி........... கட்டாயம் செய்யுங்கள்... இதில் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ பெண்கள் என பாராது.. நாம் பெண்கள் என்ற உணர்வுடன் ஆரம்பியிங்கள்.......இறைவன் உங்களுடன்........
Reply : 0 0
xlntgson Monday, 17 October 2011 10:17 PM
ஆண்களுக்கு எதிரான பொய் முறைப்பாடுகளுக்கு எதிராக ஓர் அமைப்பும் தேவை! பார்த்தால் குற்றமாம், பாடினால் குற்றமாம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
7 hours ago
7 hours ago
18 May 2025