2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர் யாழ். விஜயம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யுத்தத்திற்கு பின்னரான யாழ். குடாநாட்டின் நிலைமைகளை நேரில்  வந்து அறிந்துகொள்வதற்காக ஜக்கிய அமெரிக்க நாடாளுமன்றக்குழுவினர் யாழ். குடாநாட்டிற்கான விஜயமொன்றை இன்று புதன்கிழமை மேற்கொண்டனர்.

கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் யாழ். வந்துள்ள ஜக்கிய அமெரிக்க நாடாளுமன்றக்குழுவினரை வரவேற்ற யாழ். படைத் தலைமையக அதிகாரிகள் யாழ். கோட்டை மற்றும் யாழ். மாவட்ட செயலகம், யாழ். நகரப்பகுதி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

ஜக்கிய அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினரான கெட்சலர், வன்சான்சலர், ஜக்குயின்ரன்ஸ் ஆகியோரடங்கிய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தை நேரில் வந்து பார்வையிட்டனர்.

இதேவேளை, யாழ். குடாநாட்டின் மீள்குடியேற்றம், அபிவிருத்திப்பணிகள், மக்களின் வாழ்வாதார நிலைமைகள் மற்றும் உல்லாசப் பயணிகளின் வருகை ஆகியன தொடர்பில் ஜக்கிய அமெரிக்க நாடாளுமன்றக்குழுவினருடனான சந்திப்பில் கலந்துரையாடியதாக அந்த மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இதன்போது யாழ். குடாநாட்டின் சமகால நிலைப்பாடுகள் குறித்து ஆராய்ந்த  ஜக்கிய அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், யுத்தத்திற்கு பின்னரான யாழ். குடாநாட்டின் நிலைமைகளை எவ்வாறுள்ளதெனவும் கேட்டறிந்துகொண்டனர். அத்துடன்,  இடம்பெயர் மக்களின் மீள்குடியேற்றம், மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரம், கைத்தொழில் முதலீடுகள் ஆகியன குறித்தும் அவர்கள் கேட்டறிந்துகொண்டதாகவும் யாழ். அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். 

யாழ். அரசாங்க அதிபருடனான கலந்துரையாடலில் ஜக்கிய அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினரான கெட்சலர், வன்சான்சலர், ஜக்குயின்ரன்ஸ் ஆகியோர் உட்பட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களும் ஜக்கிய அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜெயல விக்கிரமசூரியவும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X