2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வேலணை ஜஸ் உற்பத்தி தொழிற்சாலையை திறந்துவைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். வேலணைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாரிய ஜஸ்கட்டி உற்பத்திச் தொழிற்சாலையைத் திறந்து வைப்பதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன  நாளைமறுதினம்  ஞாயிற்றுக்கிழமை யாழ். குடாநாட்டிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரட்னவுடன் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பிரதியமைச்சர் சுசந்த  புஞ்சிநிலமேயும் யாழ். குடாநாட்டிற்கு வருகை தரவுள்ளதாக  யாழ். கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடாமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரும் இந்த நிகழ்வில்  கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X