Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் அச்சமின்றி கல்வியைத் தொடர முடியும் என்ற உத்தரவாதத்தினை பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கியுள்ளதாக யாழ். பல்கலைக்ழக நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் பாதுகாப்பு அதிகாரிகளின் உறுதி மொழிகளை தாம் நம்பத் தயார் இல்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
தமது மூன்று அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாளை திங்கள் தொடக்கம் தொடர் வகுப்புப் பகிஸ்கரிப்பு போராட்டம் தொடரும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் பாலசுப்பரமணியம் தவபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
'கடந்த காலங்களிலும் வாய்மூல பாதுகாப்பு உறுதி மொழிகள் வழங்கப்பட்டது. ஆனால், எங்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பு பிரிவினர் எமுத்துமுல உறுதி மொழிகள் வழங்க வேண்டும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் பாலசுப்பிரமணியம் தவபாலசிங்கம் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டமையினால் ஏற்பட்ட அச்சம் காரணமாக மாணவர்கள் மூன்றம்ச கோரிக்கைகளை முன்வைத்து வகுப்புக்களைப் புறக்கணித்து வருகின்றனர்.
இந்த மாணவர்களின் வகுப்புப் பகிஷ்கரிப்புத் தொடர்பாகவும் மாணவர்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகள் என்பவற்றை ஆராய்ந்த பல்கலைக்கழக நிர்வாகம், சிரேஷ்ட்ட மாணவ ஆலோசகர்கள் தலமையில், பீடாதிபதிகள், மாணவ ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.
இதன் பிரகாரம் பல்கலைக்கழக நிர்வாகம், யாழ்.பாதுகாப்புக் கட்டளைத் தளபதி, யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகள் ஆகியோரை நேற்று சனிக்கிழமை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பின்போது பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது எனவும் கோரப்பட்டதுடன், மாணவர்களினது கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றும் சமர்ப்பித்தனர்.
நடந்த சம்பவத்தையும், மாணவர்களின் கோரிக்கைகளையும் அறிந்து கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள், மாணவர்கள் அச்சம் இன்றி பல்கலைக்கழகம் சென்று தமது கல்வியினைத் தொடர முடியும் என்ற உறுதிமொழியை வழங்கியுள்ளதுடன், மாணவர் தலைவர் தாக்கப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு துரிதமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.
ஆனால் பாதுகாப்புத் தரப்பினர் வழங்கிய உறுதி மொழிகளை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை என இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago