Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 27 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இந்திய மீனவர்களின் பிரச்சினை இரு நாடுகளின் பரஸ்பர உறவுகளைப் பாதிப்பதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை யாழ். குடாநாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் வருகை தந்தனர். யாழ்.மாவட்டச் செயலகத்தில் அரச அதிபருடன் கலந்துரையாடலை முடிந்துக் கொண்டு வெளியேறிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்விதம் குறிப்பிட்டார்.
வடபகுதியில் இந்திய மீனவர்கள் அத்துமீறி வடகடலின் வளங்களைச் சுரண்டிச் செல்கிறார்களே அது பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பதிலளித்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை பற்றியும் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுக்கள் இடம்பெற்றுவருவதாகவும் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்படலாம் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
அத்தோடு யாழ்ப்பாண மக்களின் அபிவிருத்திகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளதாகவும் வவுனியாவில் தடுப்பில் உள்ளவர்களைச் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், வடபகுதி மக்களின் இந்திய வீட்டுத்திட்டம் விரைவில் முழுமையடைந்து விடும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை அரசு மீதான போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து இந்திய அரசு இலங்கையைக் காப்பாற்றுமா? என ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் எதுவும் அளிக்க முடியாத நிலையில் தான் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago