2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.குடாவின் தற்கால நிலமைகள் தொடர்பில் சுவிஸ் தூதுவராலய அதிகாரிகள் ஆராய்வு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 28 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் பத்து சதவீதமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு எதுவும் இல்லாமல் இருப்பதாகவும் அவர்களுக்கான ண்லைத்திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் உதவி செய்யவேண்டும் என யாழ்.மாவட்ட செயலார் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை யாழ். குடாநாட்டிற்கு இலங்கைக்கான சுவிஸ் நாட்டுத் தூதுவர் தோமஸ் லிச்சர், சுவிஸ் தூதுவராலய திட்டமிடல் பணிப்பாளர் ஜெனி கொண்டாசியஸ் மற்றும் அதிகாரிகள், யாழ். அரச செயலர் திருமதி இமல்டா சுகுமாரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் யாழ். குடாநாட்டில் யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்களின் சுயதொழில் முயற்சிகள், சிறுபிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள், யாழில் வீடற்றோருக்கான வீடமைத்தல் மற்றும் வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கான விடுதிகள் பற்றாக்குறை என்பன பற்றி ஆராய்ந்து அறிந்து கொண்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X