Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2011 நவம்பர் 01 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். போதனா வைத்தியசாலையில் லிப்ற் வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை எனவும் இதனால் நோயாளர்களை தள்ளுவண்டியில் மேல் மாடிகளுக்கு கொண்டு செல்வது மிகவும் கடினமான ஒன்றாக இருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பலானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் யாழின் சுகாதார சேவைகள் தொடர்பாக கருத்து தொரிவிக்கும் போதே மேற்படி அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை யாழ். மாவட்டத்தில் வைத்தியர்களின் தேவை அதிகமாக இருப்பதாகவும் யுத்தத்தினால் பாதிப்படைந்துள்ள 50 வைத்தியசாலைகள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதிகள், வைத்தியருக்கான வீடுதிகள் இல்லை என்பதால் வைத்தியர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பார் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அத்தோடு முள்யான், மண்டைதீவு வைத்தியசாலைகள் புனரமைப்பு செய்யப்படவேண்டும் எனவும் யாழ். வைத்தியசாலைக்களுக்கான மின்சார வசதிகள் போதுமானதாக இல்லை எனவும் இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் இன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போது தெரியப்படுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
3 hours ago