2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் தொடர் மழை; தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 02 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக கடற்கரையை அண்டியுள்ள சில பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

அண்மையில் மீளக்குடியேறிய கடற்கரையை அண்டிய கிராமங்களான அரியாலை கிழக்கு, பூம்புகார், மணியம்தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களே அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். உறவினர்கள் மற்றும்  நண்பர்களின் வீடுகளில் தாங்கள் தஞ்சமடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.  

யாழ். குடாநாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன்,  இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் யாழ்ப்பாணத்தின்  கரையோரப்பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X