2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் வன்முறைகளுக்காக நீதிமன்றம் சென்று போராடுவேன்: யாழ்.அரச அதிபர்

Kogilavani   / 2011 நவம்பர் 05 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அது நிறுத்தப்பட வேண்டும். பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் வன்முறைகளுக்காக நீதி மன்றம் சென்று போராடுவேன் என யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் பால் நிலையும் அபிவிருத்தியும் பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பெற்றோர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்க வேண்டும் என இந்த சமூகம் எதிர்பார்க்கிறது. அது நிச்சயம் நடக்காது.

யாழ்.மாவட்டத்தில் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு முடிவு வேண்டும்.  ஊடகங்களும் எங்களோடு நின்று பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்காகவும், வன்முறைகளுக்கு எதிராகவும் போராடவேண்டும்.

பெண்களை  பாலியல் நுகர்பொருட்களாக பார்க்கவேண்டாம், பாலியல் ரீதியில் அணுகி அவர்களைப் பார்ப்பது, சிரிப்பது, தொடுவது எல்லாம் பாலியல் வன்முறைதான்.  அது நிறுத்தப்பட வேண்டும்.

யாழில். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக தினமும் முறைப்பாடுகள் கடிதங்களாக வந்து கொண்டு இருக்கின்றன. நிச்சயம் அவர்களுக்கு நீதி வழங்குவேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X