Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 08 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான பொறிமுறையொன்று அடுத்த வருடம் தை மாதத்திலிருந்து செயற்படவுள்ளதாக யாழ். மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களைவிட வீதி விபத்துக்களினால் இறப்பவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. அதன் காரணமாக இளம் பராயத்தினர் அங்கவீனமானவர்களாக மாறுகின்றனர். இந்த நிலை தொடராமல் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
யாழ். இளைய சமூகத்தினர், தற்போது அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள் காரணமாக தங்களது எதிர்கால வாழ்க்கையை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் எஸ்.ரவிராஜ் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தைமாதத்திலிருந்து கிராம மட்டங்களில் விபத்துக்கள் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இறங்கவுள்ளனர்' எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
3 hours ago