Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 09 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடகடல் பகுதிகளில் இந்திய மீனவர்கள் அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பாகவும், வடகடல் வளங்களை அவர்கள் அள்ளிச் செல்வது தொடர்பாக யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடகடல் மீனவர்கள் பிரச்சினை சார்ந்து சற்றும் வாய்திறக்காதவர்களாக இருப்பதாக யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் வளதுறைப் பணிப்பாளர் இ.ரவீந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல்வளத்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
'யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடகடல் தொழிலாளர்கள் கடற்றொழில் செய்ய முடியாத நிலை தற்போது உருவாகிக் கொண்டு இருக்கின்றன. இந்திய மீனவர்களது அத்துமீறிய அடாவடித்தனம் கட்டுக்கடங்காமல் செல்கின்றன.
வடமராட்சி, வடமாரட்சி கிழக்கு கடற் பிராந்தியத்திலிருந்து முல்லைத்தீவு கடற்பரப்பு வரை இந்திய மீனவர்கள் வடகடல் பகுதிக்குள் கிழமைக்கணக்கில் 200க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி றோலர் படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றன.
யாழ்.குடாக்கடல் பகுதிகளில் குறிப்பாக தீவுப்பகுதிகளில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் இந்திய மீனவர்களின் கடல் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் சிறு தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலையில் கரை திரும்புகின்றனர்.
எதிர்வரும் தை மற்றும் மாசி மாதங்களில் இந்திய மீனவர்கள் வடகடல் பகுதிகளில் தொழில் செய்வது அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. இதேவேளை, வடபகுதி மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக அக்கறை செலுத்துவது இல்லை எனவும் வடகடல் கடற்றொழிலாளரகளின் பிரச்சினை குறித்து கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago