2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அவுஸ்ரேலிய நாடாளுமன்ற குழு யாழ். விஜயம்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு முயற்சியில் மக்களுக்கு நம்பிக்கையான விடையங்கள் அரசியால் வாதிகளினால் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து ஆராய்வதற்காக அவுஸ்ரேலிய நாடாளுமன்ற குழுவினர் ஜவர் இன்று செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட இவர்கள் இன்று செவ்வாய் கிழமை யாழ்.மாவட்ட அரச அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இவர்களுடனான சந்திப்பு குறித்து யாழ்.அரச அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

யாழின் பொருளாதார வளங்களின் பரிவர்த்தனை தொடர்பாகவும் அபிவிருத்திப் பணிகள், கலாசார விடையங்கள், மக்களின் மகிழ்ச்சியான பொழுதுபோக்குகள் குறித்து ஆராய்ந்தாக அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்ரேலிய நாடாளுமன்ற குழுவினரை மரியா வல்வஸ்னே என்பவர் தலைமையில் வந்துள்ளதாகவும் அவர்கள் நேற்று கிளிநொச்சி பரந்தன் பகுதிக்கு மேற்கொண்டு இருந்ததாக அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .