2025 மே 17, சனிக்கிழமை

தேசிய சுகாதார மேம்பாட்டு நிலையில் யாழ்ப்பாணத்துக்கு மூன்றாவது இடம்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 28 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

2011 ஆம் ஆண்டுக்கான தேசிய சுகாதார மேம்பாட்டு நிலையில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு மூன்றாவது இடம் கிடைத்திருப்பதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன்கிழமை வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.பிராந்திய சுகாதார சேவை நிலையம் வடமாகாணத்திலேயே முதன்மையானதாகவும் நாடாளாவிய ரீதியில் 26 பிராந்திய சுகாதார நிலையத்தில் மூன்றாவது இடத்தில் தன்னைத் தக்கவைத்துள்ளது.

கடந்த 30 வருடகால யுத்ததின் போது மக்களின் உயிரைப்பாதுகாப்பதற்காக அயராத அர்பணிப்போடு யாழ்.வைத்தியர்கள் செயற்பட்டு இருக்கிறார்கள். மக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயற்பட்ட வைத்தியர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.

ஏனைய மாவட்டங்களைவிட யாழில் தரமான சுகாதார நிலை காணப்படுகிறது. மக்களின் வாழ்வியலில் பல சுகாதார முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளர், பிராந்திய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர் இதில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .