2025 மே 17, சனிக்கிழமை

யாழில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி: முதல்வர் பற்குணராஜா

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 29 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழில் இந்திய கலாச்சார மையம் அமைப்பதற்கான கட்டிட வரைபடம் யாழ்.மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட நூலகத்தில் கட்டுவதற்கான அனுமதி கிடைத்திருப்பதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபையின் ஒத்திவைக்கப்பட்ட 10ஆவது கூட்டத்தொடர் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போது இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் பரதிபலிக்கும் வகையில் இந்தியக் கலாச்சார மையம் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

இந்த இந்தியக் கலாசார மையம் திறப்பு விழாவில் இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்வும் நடைபெறுவதற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் சபையில் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • Jay Friday, 30 December 2011 12:33 AM

    ரொம்ப முக்கியம்!

    Reply : 0       0

    muheeth samsudeen Friday, 30 December 2011 02:42 PM

    இது வைகோவிற்கு தெரியுமா? ஏ ஆர் ரஹ்மானை வரவிடமாட்டரே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .