2025 மே 17, சனிக்கிழமை

லண்டனுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது

Super User   / 2012 ஜனவரி 04 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

பிரித்தானிய, லண்டனுக்கு இளைஞர்களை அனுப்பிவைப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட அக்கரைப்பற்றை சேர்ந்த முகவரை யாழ். விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை  யாழ். நீதிவான் மா. கணேசராச முன்னிலையில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்திய போது, 30,000 காசு பிணையிலும் 300,000 ஆட் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார்.

குறித்த நபர் வெளிநாட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாவட்ட பதிவாளர் முன்னிலையில் ஒப்பம் இடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த முகவர் லண்டனுக்கு அனுப்பிவைப்பதாக கூறி அச்சுவேலியை சேர்ந்த இளைஞனிடம் 700,000 ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதேவேளை திருநல்வேலியை சேர்ந்த இளைஞனிடம் 600,000 ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்பத்திரிகை மன்றில் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் தாக்கல் செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .