Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 10 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி, தாஸ்)
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள நினைவு தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது
கடந்த 1974ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 10 பேரையும் நினைவு கூரும் முகமாக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. இந்த அஞ்சலி நிகழ்வில் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலியும், சுடர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதோடு நினைவு உரைகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சொலமன் சிறில், சிவாஜிலிங்கம் தர்மலிங்கம் சித்ததாத்தன் மற்றும் யாழ்.மாநாகர, பிதேச சபையின் தமிழ்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
56 minute ago
1 hours ago
3 hours ago