2025 மே 17, சனிக்கிழமை

அராலியில் புதிய நீர்வழங்கல் திட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 25 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். அராலிப் பகுதியில் சுமார் 2.8 மில்லியன் ரூபா செலவில் புதிய நீர்வழங்கல் திட்டம் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அராலிப் பகுதியில் நீண்டகாலமாக நிலவிய குடிநீர் பிரச்சினை இத்திட்டத்தின் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வலிமேற்கு பிரதேச சபைத் தலைவர் ஐங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .