2025 மே 17, சனிக்கிழமை

யாழ். பல்கலை கல்விசார் ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 26 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் தங்களது சம்பள முரண்பாட்டைத் தீர்க்கக் கோரி இன்று வியாழக்கிழமை அடையாள பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு குறிக்கப்பட்டுள்ள சம்பளத்தை தருமாறு கோரியும் சம்பள முரண்பாடுகளைத் தீர்த்து சுமூகமான நடைமுறையைப் பின்பற்றுமாறும் கோரி இன்று முழுநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் குறிக்கப்பட்டுள்ள சம்பள நிலுவைகள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் 25 வீதமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கோரியே தாங்கள் வேலை நிறுத்தில் குதித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .