Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 27 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.குடாநாட்டில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் தங்களுடைய படகுகள், மீன்பிடி அனுமதிப்பத்திரம் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதிகளை உடனடியாக யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் திணைக்களத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளுமாறு யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த கலத்தில் இதுவரை பதிவு செய்யாதவர்களும் உடன் பதிவு செய்து அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது. கடற்றொழில் நீரியல்வளங்கள் 1996ஆம் ஆண்டு 2ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் பதிவு செய்யாத அனைத்து கடற்றொழில் படகுகளும் அரசுடமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உடனாடியாக யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் திணைக்களத்திற்கு தகுந்த ஆவணங்களுடன் வருகை தந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ்.குடாநாட்டு கடற்றொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025