Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
A.P.Mathan / 2012 பெப்ரவரி 01 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தர்ஷன்)
சுயநிதியத்தின் அடிப்படையில் பிஈ, எம்பிபிஎஸ் மற்றும் பி.பார்ம் கற்கைகளுக்காக இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் தொடர்பிலான விபரங்கள் இந்திய தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
சுயநிதியத்தின் அடிப்படையில் இம்முறை (2012-2013) மாணவர்களின் அனுமதி இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இத்தொகையானது 20 இலிருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய - இலங்கை அறிவு முனைப்பு திட்டத்தின் கீழ், இலங்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசில்கள் சுமார் 500 ஆக உயர்வடைந்துள்ளது. இப்புலமைப்பரிசில் திட்டத்தில் பாடநெறிக் கட்டணம், புத்தக கொள்வனவுச் செலவு, தங்குவதற்கான செலவு, புலமையாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு போன்றவற்றை உள்ளடங்கியிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்திட்டத்தை 3 ஆண்டுகாலங்களுக்கு செயற்படுத்துவதற்காக 2.5 மில்லியன் இலங்கை ரூபா செலவிடப்படுகின்றது.
புலமைப்பரிசில் தொடர்பான விபரங்கள்
ஐசிசிஆர்சி கல்வித்தொகையின் கீழ் நேரு நினைவுத்திட்ட உதவி தொகைத் திட்டம் 120 இடங்கள், மௌலானா ஆசாத் உதவி தொகைத் திட்டம் 50 இடங்கள், அறிவியல் 20 இடங்கள், பொறியியல் ஆகிய புலமைப்பரிசில்களும், ராஐPவ் காந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 'தகவல் தொழில்நுட்ப துறையில் 25 இடங்களுக்கும் வழங்கப்படவுள்ளன.
இவற்றை தவிர ஏனைய புலமைப்பரிசில் திட்டங்களாக பொதுநலவாய நாடுகள், சார்க் நாடுகளுக்கான புலமைப்பரிசில், ஐஒசி- ஏஆர்சி புலமைப்பரிசில் திட்டம், இந்திய இலங்கை பரிவர்த்தனை புலமைப்பரிசில் திட்டம் ஆகியன வழங்கப்படவுள்ளன.
இதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட புலமைப்பரிசில் திட்டத்திங்களுக்கான விண்ணப்ப படிவங்களை இலங்கை உயர் கல்வி அமைச்சின் இணைய வலைத்தளத்தில் இருந்து தரைவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.
ஐசிசிஆரிசியின் கீழ் வரும் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை இலங்கை உயர் கல்வி அமைச்சுக்கும் ஏனைய புலமைப்பரிசில் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை கல்விப் பிரிவுஇ இந்திய துணைத்தூதரகம்இ 220 பலாலி வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கும் அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள புலமைப்பரிசில் திட்டங்களில் ஒன்றை மாத்திரமே தேர்வு செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புலமைப்பரிசில் திட்டங்களுக்கு விண்ணப்பிப்போர், க.பொ.த. உயர்தரத்தில் அடிப்படை பாடங்களில் விசேட சித்தியாக 'பி' தர சித்தி, ஆங்கில பாடத்தில் 'பி' தர சித்தியும் பெற்றிருத்தல் அவசியமாகும், இதேவேளை 22 வயதிற்குற்பட்டவராக இருத்தல், இலங்கை குடிமகனாக இருத்தல் வேண்டும்.
இந்தியாவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களும் தமது 10, பிளஸ்-2 கற்கைகளுக்கான பெறுபேற்றை எதிர்பார்;த்திருக்கும் மாணவர்களும் இப்புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025