2025 மே 17, சனிக்கிழமை

தூண்டில் மீன்பிடி நடவடிக்கையை ஊக்குவிப்பதற்காக மானியம் வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழில். தூண்டில் மீன்பிடி நடவடிக்கையை ஊக்குவிப்பதுடன் அடுத்த வருடத்திலிருந்து கூடுக்கட்டி இறால், நண்டு பிடிக்கும் நடவடிக்கைகளை மீனவ சங்கங்களின் ஒத்துழைப்புடன் நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் ஆர்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில். தூண்டில் மீன்பிடி நடவடிக்கையை ஊக்குவிக்கும் நோக்கில் மானிய முறையில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தூண்டில் மீன்பிடிதொழில் உபகரணங்கள் வழங்கப்படவிருக்கின்றன.

இதற்கேற்ப இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களின் 50 மீனவர்களின் விபரங்கள் கடற்றொழில் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளது.

இத்தொழில் மூலம் கடல்வளங்கள் அழிக்கப்படாத காரணத்தினால் இத்தொழிலை ஊக்குவிப்பதற்கு கடற்தொழில் திணைகள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது குடாநாட்டில் 5 வீதமானவர்களே இத்தொழில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்ட திணைக்கள பணிப்பாளர் கூடுகட்டி தொழில் முறையை அடுத்த வருடத்தில் இருந்து மீன்பிடி சங்கங்களின் ஒத்துழைப்புடன் நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் உயிர்க்காப்பு அங்கிகளை அணிவது, படகுகள் காப்புறுதிகள் செய்யப்படுவது, அமைச்சினால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதென்றும் நீரியல்வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .