2025 மே 17, சனிக்கிழமை

யாழில் இம்முறை ஆளுநர்களின் மாநாடு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆளுநர்களின் மாநாடு நடைபெறுமென வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி வடமாகாண திணைக்கள செயலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இத்தகவலை செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக நேற்று புதன்கிழமை அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புதல், அதிபர் இடமாற்றங்களை மேற்கொள்ளுதல், பிரிவு ரீதியாக வடமாகணத்தில் நடைபெற்றுவரும் வேலைத்திட்ட முன்னேற்றங்கள் தொடர்பிலும் இக்கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டதாகவும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் கூறினார்.

இதேவேளை, அதிபர் இடமாற்றத்தை மேற்கொள்ளுவதற்கு குழுவொன்றை நியமித்து அக்குழுவின் மூலம் இடமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணித்துள்ளதாக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • Maravan Thursday, 23 February 2012 09:28 PM

    நல்ல ட்ரிப்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .