2025 மே 17, சனிக்கிழமை

யாழில் மனைவியை தீயிட்டுக் கொளுத்திய கணவன் தலைமறைவு

Kogilavani   / 2012 பெப்ரவரி 27 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதுமலைப் பகுதியில் கணவனினால் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தப்பட்ட பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து கணவன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியுள்ளதாகவும் அப்பெண் இன்று திங்கட்கிழமை மாலை எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைத் தேடும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும்  மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .