2025 மே 17, சனிக்கிழமை

யாழில் மீண்டும் மலேரியாத் தாக்கம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 28 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் என்றும் இல்லாதவாறு மலேரியா பரவிவருவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

யாழ். மாவட்டத்தில்; கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு மீண்டும் மலேரியாவின் தாக்கம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாகவும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இருந்து தற்போது தாயகத்திற்கு திரும்புபவர்கள் மூலமாக மலேரியா நோய் மீண்டும் யாழ்ப்பாணத்தில் தலைதூக்கியுள்ளதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .