2025 மே 17, சனிக்கிழமை

'தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தும் கடற்றொழிலாளர்களுக்கு மானியம் வழங்கப்படமாட்டது'

Kogilavani   / 2012 பெப்ரவரி 29 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.குடாநாட்டில் தடைசெய்யப்பட்ட றோலர் மற்றும் தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படமாட்டாது என யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார்.

யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சினால் கடந்த வாரம் சுற்று நிருபம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி இலங்கையில் தடை செய்யப்பட்ட றோலர் வொட்டம் மடியை பயன்படுத்தும் கடற்றொழிலாளர்களுக்கும் தங்கூசி வலையைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் மற்றும் கடற்றொழில் நீரியல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாமல் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படமாட்டது என அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாத முதல் வாரத்தில் கடற்றொழிலாளர்களுக்கு அவர்களின் கடற்றொழில் சங்கங்களினூடாக எரிபொருள் மானியம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .