2025 மே 17, சனிக்கிழமை

அதிக தூக்க மாத்திரை எடுத்துக்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 29 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

அதிக தூக்க மாத்திரை எடுத்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியாளவில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பண்டாரவளையைச் சேந்த ரஞ்சித் பண்டார (வயது 27) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே அதிக தூக்க மாத்திரையைக் குடித்ததினால் மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அதிக தூக்க மாத்திரை எடுப்பதற்குரிய காரணம் குறித்து பொலிஸார் தகவல் தர மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .