2025 மே 17, சனிக்கிழமை

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி: யாழ். மாவட்ட செயலகம்

A.P.Mathan   / 2012 மார்ச் 01 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கச்சதீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கான ஒழுங்குகள் யாவும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக நேற்று அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகைதரும் யாத்திரிகர்களுக்குரிய கடற்போக்குவரத்துப் பாதுகாப்பு வசதி, குடிநீர்வசதி, சுகாதார வசதிகள், கழிப்பறை வசதி, பாதுகாப்பு, வங்கி, சுங்க திணைக்களம் உட்பட சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கடற்படையினரால் 40 கழிப்பறைகளும், நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் 40 கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கடற்படையினர், பிரதேச செயலகம் ஆகியன கொள்கலன்களின் குடிநீரை ஒழுங்குசெய்துள்ளன. பாதுகாப்புக்கடமைகளுக்கென 5000 பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய யாத்திரிகர்கள் விவசாய உற்பத்திப் பொருட்கள் கொண்டுவருவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பூக்கள், பழங்கள், விதைகள் இவற்றில் தாவரத்தின் பகுதிகள், விலங்குகள், விலங்குகளின் பகுதிகள் உட்பட்ட பொருட்கள் கொண்டுவருவதற்கு யாழ்ப்பாண சுங்கப் பகுதியினர் தடைசெய்துள்ளனர்.
மக்களுக்கான உணவுகளை கடற்படையினர் வழங்குகின்றனர். குறிகட்டுவான், நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, குருநகர், பாசையூர் ஆகிய துறைமுகங்களில் இருந்து கச்சதீவுக்கான படகுசேவைகள் நடைபெறவுள்ளன.

குறிகட்டுவானில் இருந்து கச்சதீவுக்கு செல்லும் யாத்திரிகர்களுக்கு ஒருவழிப்பாதைக்கு 200 ரூபா படகுக்கட்டணமாக அறவிடப்பட்டவுள்ளது. நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒருவழிப் பயணத்திற்கான பணமாக 150 ரூபா அறிவிடப்படவுள்ளது எனவும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தவருடம் 5 ஆயிரம் யாத்திரிகர்கள் இவ்உற்சவத்தில் கலந்துகொண்டதாகவும், இந்தவருடம் 7 ஆயிரம் மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. கடற்படையினர் 6 ஆயிரம் உணவுப்பொதிகளை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இக்கூட்டத்தில் நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர், கடற்படையினர், பொலிஸ் பகுதியினர், இலங்கை வங்கியினர், சுங்கத்திணைக்களப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .