2025 மே 17, சனிக்கிழமை

யாழில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இரத்த தானம்

A.P.Mathan   / 2012 மார்ச் 02 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு 512ஆவது படைப்பிரிவின் இராணுவத்தினரும் யாழ். குடாநாட்டு பொலிஸாரும் இரத்ததானம் செய்துள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இன்று வெள்ளிக்கிழமை காலை அனைத்துவகையான இரத்தங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்ட மூன்று மணிநேரத்திற்குள் சுமார் 300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இரத்த தானம் செய்ய முன்வந்தனர்.

யாழ். போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக ஒரே நாளில் பெரும் தொகையான இராணுவத்திரும் பொலிஸாரும் இரத்ததானம் செய்தது இதுவே முதல்தடவை என யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வைங்கி அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0

  • sarithan Sunday, 04 March 2012 02:48 AM

    எந்த உள்நோக்கமும் இல்லாமல் இதயபூவமான சிந்தனையுடன் செய்திருந்தால் நல்ல விஷயம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .