2025 மே 17, சனிக்கிழமை

அபிவிருத்தி உட்கட்டமைப்பு முன்னுரிமைகள் பற்றிய கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 06 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பரமேஸ்வரன்)

யாழ்ப்பாண முகாமையாளர் அரங்கம் மற்றும் வடபிராந்திய பொறியியலாளர் நிறுவனம் ஆகியவை இணைந்து யாழ். யூரோ வில்லா மண்டபத்தில் கருத்தாடல் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது.

இங்கு அபிவிருத்தியும் உட்கட்டுமான முன்னுரிமைகளும் என்னும் தலைப்பில் பொறியியலாளரான ராஜன் பிலிப்ஸ் உரையாற்றினார். பல பொறியியலாளர்களும் புவியியலாளர்களும் சமூகத் தொண்டர்களும் இக்கருத்தரங்கில் பங்குபற்றினர். வன்னியில் காடழிப்பு ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது என சில பொறியியலாளர்கள் குறிப்பிட்டனர்.

வீதி அபிவிருத்தி காரணமாக யாழ்ப்பாணத்தில் நீர்வடிதல்  பிரச்சினையாகும் என பொறியியலாளரான எஸ்.ராமதாஸ் சுட்டிக்காட்டினார். வீதிகள் உயர்த்தப்படுவதனால் மழை காலத்தில் வீதியோரங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் பாயக்கூடிய நிலைமை உருவாகவுள்ளதாக ராமதாஸ் கூறினார். யாழ்ப்பாணத்தில் நிலக்கீழ் நீர் மாசடைதல் பற்றியும் இக்கருத்தரங்கில் பேசப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .