2025 மே 17, சனிக்கிழமை

இந்திய கரையோர காவல் படை- இலங்கை கடற்படை கூட்டு ரோந்து வேண்டும்: டக்ளஸ்

Super User   / 2012 மார்ச் 07 , பி.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான மோதல்களை தவிர்ப்பதற்காக இரு நாடுகளின் கடல் எல்லைப்பகுதியில் இலங்கை கடற்படையும் இந்திய கரையோர காவல் படையும் இணைந்து ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யோசனை தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளின் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்றை கச்சதீவில் ஏற்பாடு செய்த  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இது தொடர்பாக டெய்லி மிரரிடம் கூறுகையில், இத்தகை ரோந்து நடவடிக்கை மாத்திரமே சர்வதேச கடல் எல்லையை அத்துமீறவதை தடுப்பதற்கான வினைத்திறான நடவடிக்கையாக அமையும் எனத் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் தங்கூசு வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் றோலர் பகுடகளில் மீன்பிடித்தல் போன்ற தடைசெய்யப்பட்ட வழிமுறைகளை தவிர்க்க வேண்டுமென இச்சந்திப்பின்போது இலங்கை மீனவர்கள் வலியுறுத்தினர்.

இத்தகை நடவடிக்கைகளை இந்திய மீனவர்கள் தவிர்த்துக்கொண்டால் இக்கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான பரஸ்பர இணக்கப்பாடு குறித்து பேசுவதற்கு இலங்கை மீனவர்கள் தயார் என அமைச்சர் தேவானந்தா கூறினார்.

இதேவேளை வடகடல் பரப்பில் சட்டவிரோதமீன்பிடி தொடர்பாக த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் கவலை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .