2025 மே 17, சனிக்கிழமை

கப்பலேந்தி மாதா கோவில் புனரமைக்காமை குறித்து மக்கள் கவலை

Suganthini Ratnam   / 2012 மார்ச் 08 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டிலுள்ள கப்பலேந்தி மாதா தேவாலயம் இன்னமும் புனரமைக்கப்படாத நிலையிலுள்ளதாகவும் இத்தேவாலயத்தை புனரமைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளதாகவும் இப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தினாலும் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினாலும் இவ் ஆலயம் முற்றாக சேதமடைந்துள்ளது.  

மிகவும் பிரசித்தி பெற்ற இத்தேவாலயத்திற்கு வடமாகாணத்திலிருந்து  ஏராளமான பக்தர்கள் வருவது வழமையாகும். ஓவ்வொரு  ஆண்டும் மே மாதத்தில் நடைபெறுகின்ற பெருநாளையொட்டி அதிகமான பக்தர்கள் இத்தேவாலயத்திற்கு வருவது வழமையாகும்.

இத்தேவாலயம் சிதைவுற்ற நிலையில் தொடர்ந்துமிருப்பது மீள்குடியேறி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்ற மக்களிடையே ஆழ்ந்த கவலையை உண்டுபண்ணியுள்ளது.  

பெருமளவான கிறிஸ்தவர்களாக உள்ள   இப்பிரதேச கடற்றொழிலாளர்கள்  வாரந்தோறும் ஒருநாள் வருமானத்தை தேவாலயத்தின் கட்டுமானப் பணிகளுக்காக  ஒரு ஆண்டுகாலம் வழங்கத் தீர்மானித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .