Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 09 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கையடக்கத் தொலைபேசியில் 105 ஆபாசப்படங்களை வைத்திருந்த இளைஞர் ஒருவருக்கு 50,000 ரூபா அபராதம் விதித்து யாழ். பருத்தித்துறை நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் தீர்ப்பளித்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இவ் இளைஞர் நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவ் இளைஞரிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டபோது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதவான் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு உடுப்பிட்டி ஹோட்டலுக்கு முன்னால் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வல்வெட்டித்துறைப் பொலிஸார் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவ் இளைஞரைக் கைதுசெய்தனர். இவ் இளைஞனின் கையடக்கத் தொலைபேசியை சோதனை செய்து பார்த்தபோது, அதில் 105 ஆபாசப்படங்கள் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
siriththiran Friday, 09 March 2012 05:05 PM
உள்ளங்கையில் உல்லாச உலகம்......50000 ரூபாவுக்கு ஆப்பு ..... கொஞ்சம் அதை அடக்கி வைத்தால் என்னவாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago