2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக காட்ட அரசு முற்படுகிறது: ரணில்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 29 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

'யாழ்ப்பாணத்து தமிழ் மக்களை பயங்கரவாதிகாளாக காட்ட அரசு முற்படுகிறது' என யாழ். நெடுந்தீவில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார்.

யாழ்.தீவகத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய தேசிய கட்சிக் குழுவினர், தீவக மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அதன் போது அந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போது ரணில் விக்கிரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாத அரசினால் தமிழ் மக்களுக்கு நிச்சயம் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க முடியாது. நெடுந்தீவில் நடைபெற்றுவரும் நீதிக்குப் புறம்பான செயல்களினால் தமிழ் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மக்களின் பேச்சுரிமையைப் பறித்து ஆராஜகம் செய்கிறது. நெடுந்தீவில் நடைபெறும் படுகொலைகள், கடத்தல்கள் நீதிக்குப் புறம்பான சட்ட விரோத செயற்பாடுகள் இவை நீக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் ஏற்படுத்த வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி நடைபெறுகின்றது என அரசு சொல்கிறது. வந்து பார்த்தால் அது ஆமை வேகத்தை விட சற்றுக் குறைவாக இருக்கிறது. இந்த மக்களின் அபிவிருத்தியில் அவர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அபிவிருத்திப் பணி செய்யப்பட வேண்டும்.

ஜெனீவாவில் கூட நெடுந்தீவில் நடைபெறும் நீதிக்குப் புறம்பான சட்ட விரோத படுகொலைகள் பற்றி விவாதிப்பதற்கு அரசு சந்தர்பத்தை கொடுத்திருக்கிறது. நெடுந்தீவு மக்கள் மிகவும் பயப்பீதியுடன் வந்திருக்கிறார்கள். தங்களுக்கு ஏதும் நடைபெறும் என அச்சப்படுகிறார்கள். அவர்கள் என்னுடன் பேசுவதற்கு பயப்படுகிறார்கள்.

நான் நெடுந்தீவுக்கு வருவதை அறிந்தும் மக்களை எனது கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர். என்னைச் சுற்றி மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சுற்றிச் சுற்றி வந்ததை நான் அவதானித்தேன்.

எனக்கு செல்வதற்கு வாகனம் கொடுக்கக்கூடாது என இங்குள்ள அரசியல் கட்சியினர் சொன்னதனால் நான் சிறிய லான்மாஸ்டரில் இந்த மக்களைச் சந்திப்பதற்கு நெடுந்தீவுக்கு வந்தேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X