2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்' என்ற தலைப்பில் யாழில் சுவரொட்டிகள்

Suganthini Ratnam   / 2012 மே 01 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                                (கவிசுகி)


யாழ்ப்பாணத்தில் மே தினத்தையொட்டி எதிர்க்கட்சிகள் ஊர்வலமாகச் செல்லவுள்ள  வீதியோரங்களில் 'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்' என்ற தலைப்பிடப்பட்ட பல சுவரொட்டிகள் இனந்தெரியாத நபர்களினால் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து  நடத்தவுள்ள  மே தினக் கூட்ட மைதானத்தைச்  சுற்றியும் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

யாழ். மக்கள் என்ற அடிக்குறிப்புடன் 'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்', 'தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் துரோகிகள் எமக்கு வேண்டாம்', 'மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் என இச்சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X