2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் காணாமல்போன மோட்டார் சைக்கிள் கடுகஸ்தோட்டையில் கண்டுபிடிப்பு; இருவர் கைது

Menaka Mookandi   / 2012 மே 11 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் திருடப்பட்ட மோட்டர் சைக்கிளொன்று கடுகஸ்தோட்டை பகுதி  திருட்டுக் கும்பலொன்றிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். இராசாவின் தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளைஞருடைய பல்ஷர் ரக மோட்டர் சைக்கிள், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் வைத்து திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவியுடன் இந்த மோட்டார் சைக்கிள் கடுகஸ்தோட்டை பகுதியில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடையதான பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.பொலிஸார் குறிப்பிட்டனர்.

இன்றைய தினம் இந்த மோட்டார் சைக்கிளை வைத்திருந்த நபரும் அவருக்கு விற்பனை செய்த நபரும் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது மோட்டார் சைக்கிளை வாங்கியவரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள்பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மற்றைய நபர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து வாக்கு மூலத்தை பதிவு செய்யுமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X