2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் தீர்வு இதுவரை முன்வைக்கப்படாமை கவலையளிக்கிறது: அமெரிக்க தூதரக அதிகாரி

Super User   / 2012 மே 13 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


வடக்கில் போர் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்த பிரச்சினைக்கு இதுவரை அரசியல் தீர்வு முன்வைக்கப்படாமல் இருப்பது கவலையளிக்கிறது என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் கலாநிதி போல் காட்டர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை "ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான" விழிப்புணர்வுக் கருத்தரங்கில் முதன்மை விருந்திரக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலுக்காக அமெரிக்க அரசு 200 கோடி டொலர்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவியானது வடக்கு மற்றும் கிழக்கு மக்களை சென்றடைந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய உடனடி தேவைகளுக்காகவும் அவர்களின் உணவு, உறைவிடம் மற்றும் மருத்துவ தேவைக்களுக்காகவும் இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது

எமது உதவிகளினால் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டது. கண்ணிவெடி அகற்றுவதற்காகவும் இலங்கைக்கு உதவி வருகின்றோம். இந்த நாட்டில் தீர்கப்படாத பல பிரச்சனைகள் இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவிதமான முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. பல அரசியல் நிபுணர்களின் கருத்து படி இந்த நாட்டில் அரசியல் தீர்வு எட்டப்படாது விட்டால் சர்வதேசம் தடையிடுவதற்கு வழியேற்றடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பருந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம் ஜனநாயக மீளுகை ஏற்படும். தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வை நிவர்த்தி செய்ய தவறியமையினாலே ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இலங்கையில் மனிதாபிமான பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது காணாமல் போனோர் விவகாரம். இது கண்டறியப்பட வேண்டியது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணனக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுல்படுத்துவதற்கு போதிய காலம் கொடுக்கப்படவில்லை என அரசு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது

பேச்சுவார்தையின் மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை ஆனால் இரு தரப்பினருக்கு இடையிலான பேச்சுவார்த்தை தடைப்பட்டு இருப்பது கவலையளிக்கிறது' என்றார்

இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், யாழ்பாணத்திலுள்ள இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் எஸ்.மகாலிங்கம், சட்டத்தரணி குருபரன், பொருளியல் விரிவுரையாளர் வரதராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X