2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கருவிலேயே சிசுவை அழிப்பதற்காக நாட்டு வைத்தியம் செய்த பெண் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2012 மே 14 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

தனது வயிற்றில் உள்ள சிசுவை அழிப்பதற்காக மருந்து பாவித்த குடும்பப் பெண் ஒருவர் அதீத இரத்தப் போக்கு காரணமாக மரணமாகியுள்ளார் என்று யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பப் பெண் ஒருவர் தனது வயிற்றில் வளரும் சிசுவை அழிப்பதற்காக நாட்டு வைத்திய மருத்தை பாவித்துள்ளதாகவும் இதன் காரணமாக தீராத வயிற்றுவலி காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழ், கொழும்புத்துறையைச் சேர்ந்த உதயகுமார் ஷர்மிலா (வயது 21) என்ற பெண்ணே உயிரிழந்தவராவர். இவரது மரணம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X