2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிவிலில் ரோந்து சென்ற பொலிஸாரை தாக்கியவர் கைது

Super User   / 2012 மே 14 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். குருநகர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிவிலில் ரோந்து சென்ற பொலிஸாரை மது போதையில் தாக்கிய நபர் யாழ். பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த நபர் யாழ். பொலிஸாரினால் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, குறித்த குற்றத்தை தான் செய்யவில்லை என மறுத்துள்ளார்  எனினும், குறித்த நபரை எதிர்வரும் மே 27ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிவான் மா.கணேசராச உத்தரவிட்டுள்ளார்

ஆத்துடன் குறித்த நபரை தொடந்து விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்குமாறும் உத்தரவிட்ட நீதவான், தாக்குதலுக்கு உள்ளான பொலிஸாரின் மருத்துவ அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X